எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

by -63 views
எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இதுபோலப் பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் புதிய புதிய வாகனங்களைத் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 30 புதிய வாகனங்களை இந்திய சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரிசைகட்டும் எலெக்ட்ரிக் கார்கள்… ரூ.15000 கோடி முதலீடு!
மகிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய வாகனங்களின் பட்டியலில் 16 எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் பிரிவில் 8 வாகனங்கள் இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் மீதமுள்ளவை பயணிகள் வாகனங்கள் ஆகும். எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தொழில் விரிவாக்கத்துக்காக ஒரு புதிய பிராண்டை உருவாக்கும் திட்டத்தில் மகிந்திரா நிறுவனம் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பிறகு, எலெக்ட்ரிக் கார்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது இந்திய நிறுவனம் இதுவாகும். எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கி அவற்றை வீழ்த்த உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது முழு பலத்துடன் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் களமிறங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *