எலெக்ட்ரிக் காரை மறந்துடுங்க.. மாருதி சுசூகியின் அதிர்ச்சி அறிவிப்பு!

by -30 views

ஹைலைட்ஸ்:

  • 2025 வரை எலெக்ட்ரிக் கார் கிடையாது
  • மாருதி சுசூகி அறிவிப்பால் அதிர்ச்சி

இந்தியாவில் பல்வேறு டூவீலர் நிறுவனங்களும், கார் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசுப்பாடு குறையும் என்பது ஒரு புறம். மறுபுறம், பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையால் ஏற்படும் சுமையை தாங்க முடியாமல் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர். இக்காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக், கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விரைவில் எலெக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் இல்லை என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் நிறுவனம் மாருதி சுசூகி. இந்நிறுவனம் Wagon R காரின் எலெக்ட்ரிக் மாடலை பரிசோதித்து வருகிறது.

மாருதி சுசூகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா.. பங்குதாரர்கள் அதிர்ச்சி!
எனினும், 2025ஆம் ஆண்டு வரை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். மாருதி சுசூகியின் செப்டம்பர் காலாண்டு வருவாய் விவரங்களை குறித்த நிகழ்வில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாருதி சுசூகியின் எலெக்ட்ரிக் வாகனங்களை எப்போது எதிர்பார்க்கலாம் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.சி.பார்கவா, 2025ஆம் ஆண்டுக்கு பிறகுதான் எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *