எக்ஸ்ட்ரா வருமானம் சம்பாதிக்கலாம்.. ஃப்ளிப்கார்ட்டின் செம திட்டம்!

by -26 views

ஹைலைட்ஸ்:

  • கூடுதல் வருமானம் சம்பாதிக்க அருமையான திட்டம்
  • ஃப்ளிப்கார்ட் எக்ஸ்ட்ரா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் புதிதாக ஃப்ளிப்கார்ட் எக்ஸ்ட்ரா (Flipkart Xtra) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதுவொரு மார்க்கெட்பிளேஸ் மாடல் ஆகும். தனிநபர்கள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு உதவும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

தனிநபர்கள், டெக்னிசியன்கள், சேவை வழங்குநர்கள் என பல தரப்பினர் பணம் சம்பாதிப்பதற்கு ஃப்ளிப்கார்ட் எக்ஸ்ட்ரா உதவும் என்று கூறப்படுகிறது. இதில் இணைய விரும்புவோர் ஈசியாக மொபைலில் கூகுள் பிளே ஸ்டோரில் ‘Flipkart Xtra’ ஆப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

இணைந்து, வெரிபிகேஷன் முடிந்தபின் பல்வேறு சேவைகளில் ஈடுபடலாம். குறிப்பாக, டெலிவரி ஊழியர்கள், சேவை ஏஜன்சி, டெக்னிசியன் போன்ற வேலைகளில் இணைந்துகொள்ளலாம் என ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கான கிரெடிட் கார்டு.. 3 நிமிடத்தில் கிடைக்கும்.. அதுவும் மொபைலிலேயே!
இத்திட்டத்தின் மூலம் ஃப்ளிப்கார்ட்டின் விநியோக அமைப்பு மேம்படுவது, டெலிவரியை வேகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஏராளமான வேலைவாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் இத்திடத்தால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனிநபர்களும் தங்களை இணைத்துக்கொண்டு கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட் எக்ஸ்ட்ரா திட்டம் மூலம் டிசம்பர் மாதத்துக்கு முன் 4000 பார்ட் டைம் ஊழியர்களை இணைக்க ஃப்ளிப்கார்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *