உணவகத் துறையை பட்டினியில் போட்ட கொரோனா!

by -32 views

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. உணவகங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆன்லைன் உணவு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் பார்சல் உணவுகளுக்கு மட்டுமே அனுமதி எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் வந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் இந்திய உணவகத் துறை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

இந்திய தேசிய உணவக கூட்டமைப்பு (NRAI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் மட்டும் இந்திய உணவு சேவைகள் துறை 53 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் 25 சதவீத உணவுத் தொழில்கள் இழுத்து மூடப்பட்டன. இதனால் இத்துறையைச் சார்ந்த 24 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. பலருக்கு பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது. இன்னும் பலருக்கு மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் இத்துறையை நம்பியிருந்தவர்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

மாருதி சுசூகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா.. பங்குதாரர்கள் அதிர்ச்சி!
கொரோனா ஊரடங்குப் பிரச்சினைகளுக்குப் பிறகு உணவகத் துறையில் பணியாற்றுபவர்களில் 32 சதவீதத்தினர் தங்களது வேலையை இழந்தனர். இரண்டாவது ஊரடங்கு வந்து சென்ற பிறகும் இந்த வீழ்ச்சி 31 சதவீதமாக இருந்தது. இந்திய உணவகத் துறையின் மதிப்பு 2018-19 நிதியாண்டில் ரூ.4.23 லட்சம் கோடியிலிருந்து இப்போது ரூ.2லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. இந்த நிதியாண்டில் 85 சதவீத முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வருவாய் மந்தமாகவே இருக்கிறது. 2021-22 நிதியாண்டில் ரூ.4.72 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *