உச்சத்தில் காய்கறி விலை… விழி பிதுங்கும் இல்லத்தரசிகள்!

by -26 views

சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். காய்கறி வாங்குவதற்கே பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த மாதமும் விலையேற்றம் நீடிக்கிறது. நேற்றும் இன்றும் சென்னையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில் இன்று (அக்டோபர் 5) ஒரு கிலோ தக்காளி விலை 30 ரூபாயாக உள்ளது. நேற்றும் இதே விலைக்கே விற்பனையானது. வெங்காயம் விலை நேற்று 16 ரூபாயிலிருந்து இன்று 18 ரூபாய்க்கு வந்துள்ளது. அவரைக்காய் விலை 20 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முருங்கைக்காய் விலை 40 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கேரட் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.30
வெங்காயம் – ரூ.18
அவரைக்காய் – ரூ.35
பீன்ஸ் – 40
பீட்ரூட் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.15
நூக்கல் – ரூ.7
உருளைக் கிழங்கு – ரூ.17
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.15
சுரைக்காய் – ரூ.15
பாகற்காய் – ரூ.15
கத்தரிக்காய் – ரூ.10
குடை மிளகாய் – ரூ.20
கேரட் – ரூ.40
காளிபிளவர் – ரூ.30
சவுசவு – ரூ.10
தேங்காய் – ரூ.20
வெள்ளரிக்காய் – ரூ.7
முருங்கைக்காய் – ரூ.40
இஞ்சி – ரூ.50
பச்சை மிளகாய் – ரூ.15
கோவைக்காய் – ரூ.10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *