உங்க ஏடிஎம் கார்டுக்கு ஆபத்தா? உடனே இதைப் பண்ணுங்க!

by -54 views

நம் அனைவருக்குமே வங்கிக் கணக்கு இருக்கும். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வங்கிகள் நமக்கு ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு வழங்கியிருக்கும். இதை வைத்து ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

சில சமயங்களில் டெபிட் கார்டை நாம் தொலைத்துவிடுவோம். திருடுபோகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி தொலைந்த பிறகோ அல்லது திருடுபோன பிறகோ அதிலிருக்கும் பணத்தை வேறு யாராவது எடுத்துப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுடைய டெபிட் கார்டை உடனடியாக நீங்கள் பிளாக் செய்ய வேண்டும்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. தொலைந்துபோன அல்லது திருடுபோன டெபிட் கார்டை எவ்வாறு மிகச் சுலபமாக பிளாக் செய்வது என்று வாடிக்கையாளர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். டெபிட் கார்டை எவ்வாறு பிளாக் செய்வது என்பதைக் காட்டும் சுருக்கமான வீடியோ ஒன்றையும் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

SBI டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கு மிக முக்கியமாக உங்களுடைய மொபைல் நம்பர் தேவை. இந்த மொபைல் நம்பர் உங்கள் SBI டெபிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் SBI வங்கிக் கிளைக்கு ஓட வேண்டியிருக்கும்.

டெபிட் கார்டை உடனடியாக பிளாக் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்…

உங்களுடைய மொபைல் நம்பரில் இருந்து 1800 1234 என்ற எண்ணுக்கு போன் செய்ய வேண்டும். அதில் 0-வை அழுத்தி பிளாக் செய்யலாம்.

இதில் இரண்டு ஆப்சன்கள் இருக்கும். 1-ஐ அழுத்தினால் மொபைல் நம்பரையும் கார்டு நம்பரையும் வழங்க வேண்டியிருக்கும்.

0-ஐ அழுத்தினால் மொபைல் நம்பரையும் அக்கவுண்ட் நம்பரையும் வழங்க வேண்டியிருக்கும்.

கார்டு நம்பர் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே அக்கவுண்ட் நம்பர் ஆப்சனை தேர்ந்தெடுக்கலாம்.

கார்டு நம்பரை தேர்வுசெய்திருந்தால் உங்களுடைய ஏடிஎம் கார்டின் கடைசி 5 இலக்க எண்களைப் பதிவிட வேண்டும். இதை உறுதிசெய்ய 1-ஐ அழுத்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை கார்டு நம்பரைத் தவறாகப் பதிவிட்டிருந்தால் 2-ஐ அழுத்தி மீண்டும் கார்டு நம்பரைப் பதிவுசெய்யலாம்.

இவ்வாறு உங்களுடைய டெபிட் கார்டை உடனடியாக நீங்கள் பிளாக் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *