உங்கள் PF பணத்துக்கு ஆபத்து.. இதை மட்டும் செஞ்சிடாதிங்க!

by -29 views

ஹைலைட்ஸ்:

  • மோசடி கும்பல்கள் அட்ராசிட்டி
  • PF கணக்குதாரர்களுக்கு எச்சரிக்கை

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏற்கெனவே பொதுமக்களிடம் பல மோசடி கும்பல்கள் அரசின் பேரிலும், ரிசர்வ் வங்கி பேரிலும், வங்கிகள் பேரிலும் பொய் சொல்லி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்களுக்கு வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து நிறைய பணம் கிடைக்கும், லாபம் கிடைக்கும், வங்கிகளிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கொள்ளை அடித்து வருகின்றன மோசடி கும்பல்கள்.

இந்த வரிசையில், PF கணக்கு வைத்திருப்போரிடமும் மோசடி கும்பல்கள் கைவரிசையை காட்டி வருகின்றன. இதுபோன்ற மோசடி கும்பல்கள் EPFO நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பொய் சொல்லி PF கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு, OTP, மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றுவிடுகின்றன.

கார் வாங்கவா போறிங்க? 1 லட்சம் தள்ளுபடி.. அதிரடி சலுகைகள்!
பின்னர் இத்தகவல்களை வைத்து, பாதிக்கப்பட்டவரின் PF கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து கொடுமை செய்து வருகின்றனர். இச்சூழலில், EPFO நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறுவோரை நம்ப வேண்டாம் எனவும், அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் EPFO கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து அழைப்பு வந்தால் EPFO அல்லது அருகே இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *