உங்கள் பணம் டபுள் ஆகிடும்.. அதிசய போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

by -55 views
உங்கள் பணம் டபுள் ஆகிடும்.. அதிசய போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
உங்கள் பணம் டபுள் ஆகிடும்.. அதிசய போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

ஹைலைட்ஸ்:

  • டபுள் மடங்கு வருமானம்
  • அள்ளித் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்

தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் வெகுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஏனெனில், தபால் அலுவலகங்கள் நாடு முழுவதும் நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பரவிக் கிடக்கின்றன. பாதுகாப்பான முதலீடு, நல்ல வருமானம், அரசின் ஆதரவு ஆகியவை தபால் அலுவலக திட்டங்களின் ஸ்பெஷாலிட்டி.

தபால் அலுவலக திட்டங்களில் உங்கள் பணத்தை இருமடங்காக மாற்றும் அட்டகாசமான திட்டங்களும் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தபால் அலுவலகத்தில் கிடைக்கும் கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) மூலம் உங்கள் பணத்தை இருமடங்காக மாற்றலாம்.

எல்லா தபால் அலுவலக கிளைகளிலும் கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 124 மாதங்களில் (சுமார் 10 ஆண்டுகள்) இருமடங்காக மாறிவிடும். தற்போது கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது.

பணத்தை அள்ளித் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 124 மாதங்கள் என தபால் துறை கூறுகிறது. சிறு தொகையில் கூட இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 1000 ரூபாய். 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் முதலீடு செய்யலாம்.

விவசாயிகள் பயனடைய வேண்டுமென கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது அனைவருமே கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்துகொள்ளலாம். ஆக, சிறு முதலீட்டாளர்கள் நல்ல வருமானம் ஈட்ட இதுவொரு சூப்பர் திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *