உங்கள் ஆதார் கார்டு ஒரிஜினலா? செக் பண்ணுவது எப்படி?

by -22 views

ஹைலைட்ஸ்:

  • ஆதார் கார்டு சரிபார்ப்பது எப்படி?
  • ஆன்லைனிலேயே பார்க்கலாம்.

இந்திய குடிமக்கள் அனைவருக்குமான முக்கிய ஆவணமாகவும், அடையாள அட்டையாகவும் ஆதார் கார்டு திகழ்கிறது. ஆதார் கார்டு என்பது 12 இலக்க தனித்துவ எண் கொண்ட அடையாள அட்டை. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டு விநியோகிக்கப்படுகிறது.

ஒரு நபருக்கு வழங்கப்பட்ட ஆதார் எண் வேறு யாருக்கும் வழங்கப்படாது. வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், அரசு சேவைகள் என பல தேவைகளுக்கு ஆதார் கார்டு மிக அவசியமாக இருக்கிறது. ஒவ்வொரு நபரின் ஆதார் எண்ணும் அவரின் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக்ஸுடன் இணைக்கப்படும்.

உங்களிடம் இருக்கும் ஆதார் கார்டு உண்மையானதா என சரிபார்ப்பது எப்படி?

* முதலில் ஆதார் ஆணையத்தின் uidai.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.

* Aadhaar Services பிரிவை கிளிக் செய்யவும்.

* அதில் Aadhaar Verification ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்

* Submit பட்டனை கிளிக் செய்யவும்

* இப்போது உங்கள் ஆதார் கார்டு தொடர்பான விவரங்கள் காட்டப்படும்.

வீட்டுக் கடன் வட்டி உயர்வு.. அதிர்ச்சி அறிவிப்பு!
இந்தியாவில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் உங்கள் கையில் இருக்கும் ஆதார் கார்டு உண்மையானதா போலியானதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *