உங்களை 20 ஆண்டுகளில் லட்சாதிபதியாக்கும் மந்திரம்!

by -28 views

பணம் என்பது நம் அனைவருக்குமே மிக முக்கியமான விஷயம். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். தற்காலத்தில் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்படாமல் இருக்க சேமிப்பு அவசியம். அதுவும் கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர்.

சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் அதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. சேமிப்பது சிறு தொகையாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் சேமிப்புத் திட்டங்கள் நல்ல லாபம் தருகின்றன. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையை தொடர்ச்சியாகச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎஃப் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

வாகன விற்பனையில் மாபெரும் வீழ்ச்சி!
பிபிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். பிபிஎஃப் கணக்கை நீங்கள் அருகிலுள்ள வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ தொடங்கலாம். 500 ரூபாய் டெபாசிட் செய்து கணக்கு திறக்க முடியும். வருடத்துக்கு ரூ.1.50 லட்சம் வரையில் நீங்கள் டெபாசிட் செய்ய முடியும். நீங்கள் இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.31.95 லட்சம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *