உங்ககிட்ட 50 பைசா காயின் இருக்கா? 1 லட்சம் கிடைக்கும்!

by -28 views

ஹைலைட்ஸ்:

  • 50 பைசா காயினுக்கு 1 லட்சம்
  • உங்ககிட்ட இருந்தா நீங்களும் லட்சாதிபதிதான்

பழைய நாணயங்கள், அரிய நாணயங்கள், அரிய ரூபாய் நோட்டுகளுக்கு அண்மைக்காலமாக ஆன்லைன் மார்க்கெட் கடும் டிமாண்ட் உருவாகியுள்ளது. இதுகுறித்து பல்வேறு செய்திகளையும் அடிக்கடி பார்த்து வருகிறோம். குறிப்பிட்ட சில அரிய நாணயங்கள், நோட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்படும்போது நல்ல விலைக்கு அவற்றை விற்பனை செய்துவிட முடியும்.

இந்த வகையில், 50 பைசா நாணயத்துக்கு ஆன்லைன் மார்க்கெட்டில் கடும் டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்த காயினுக்கு அதிக விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்?

சரி எந்த 50 பைசா காயினுக்கு டிமாண்ட் உள்ளது? 2011ஆம் ஆண்டில் வெளியான 50 பைசா காயினுக்குதான் ஆன்லைன் மார்க்கெட்டில் டிமாண்ட் உருவாகியுள்ளது. ஏனெனில், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு 50 பைசா காயின்களை இந்திய அரசு வெளியிடவே இல்லை.

LIC Policy: 800 ரூபாய் முதலீடு.. 5 லட்சம் வருமானம்!
உங்களிடமும் 2011ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட 50 பைசா நாணயம் இருந்தால் அதை விற்று நல்ல வருமானம் பெற முடியும். இந்த 50 பைசா காயின் உங்களிடம் இருந்தால் OLX இணையதளத்தில் காயினின் படத்தை பதிவேற்றி விளம்பரம் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் உங்களை தொடர்புகொண்டு விலை கேட்பார்கள். அவர்களிடம் பேரம் பேசி நல்ல விலைக்கு விற்றுவிட முடியும். OLX மட்டுமல்லாமல் Indiamart போன்ற தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *