உங்ககிட்ட ஒரு ரூபாய் இருக்கா? 45000 ரூபாய் கிடைக்கும்!

by -28 views

ஹைலைட்ஸ்:

  • அரிய ஒரு ரூபாய் நோட்டுக்கு செம டிமாண்ட்
  • 45000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

ஒரு ரூபாயின் மதிப்பு என்ன என்று யாரிடமாவது கேட்டால், ஒரு ரூபாய்தான் என்று பதில் கூறுவார்கள். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை வைத்து 45000 ரூபாயும் பெற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அண்மைக்காலமாக ஆன்லைன் மார்க்கெட்டில் பழைய நாணயங்கள், அரிய நாணயங்கள், அரிய ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. அரிய நாணயங்கள், நோட்டுகளுக்கு சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை வருமானம் கிடைக்கும் அளவுக்கு டிமாண்ட் இருக்கிறது.

உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் ஏதாவது பழைய நாணயங்கள், அரிய நோட்டுகள் இருந்தால் அதை வைத்து நல்ல வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புண்டு. இவ்வகையில் தற்போது அரிய 1 ரூபாய் நோட்டுக்கு ஆன்லைன் மார்க்கெட்டில் செம டிமாண்ட் உருவாகியுள்ளது.

Fixed Deposit வட்டி உயர்வு.. புதிய ரேட் இதுதான்!
அதாவது, இந்த ஒரு ரூபாய் நோட்டில் முன்னாள் நிதித்துறை முதன்மை செயலாளர் எச்.எம்.படேலின் (H.M.Patel) கையொப்பம் இருக்கும். அதேபோல 123456 என்ற சீரியல் எண் இருக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நோட்டு மிக மிக அரிதானது என coinbazzar இணையதளம் கூறுகிறது.

எனவே, இந்த மிக அரிய ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்களும் அதை விற்று சுமார் 45000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். இந்த அரிய ஒரு ரூபாய் நோட்டு 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *