இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. எண்ணெய் விலை குறைப்பு!

by -116 views

ஹைலைட்ஸ்:

  • சமையல் எண்ணெய் விலை குறைப்பு
  • மத்திய அரசு திடீர் அறிவிப்பு

சமையல் எண்ணெய் மீதான வரிகளை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை வரி 2.5 விழுக்காட்டில் இருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியை அரசு குறைத்துள்ளது.

இதுபோக, பாமாயில் மீதான செஸ் வரி 20 விழுக்காட்டில் இருந்து 7.5% ஆகவும், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான செஸ் வரி 5 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. தீபாவளிக்கு இப்படியொரு பரிசு!
ஆர்பிடி பாமோலின் எண்ணெய், ரீஃபைண்ட் சோயாபீன் எண்ணெய், ரீஃபைண்ட் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை வரி 32.5 விழுக்காட்டில் இருந்து 17.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை உயரும் சூழலில் இறக்குமதி வரிகளை திருத்தியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *