இலவச ரயில் டிக்கெட்.. இன்னுமா நீங்க வாங்கல?

by -23 views

ஹைலைட்ஸ்:

  • இலவச ரயில் டிக்கெட்
  • பெட்ரோல் விலை தள்ளுபடி
  • ஷாப்பிங் சலுகைகளும் உண்டு

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பொதுமக்களிடையே ஷாப்பிங் மனநிலை உருவாகியுள்ளது. இதேபோல ரயில் பயணம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் டிமாண்ட் உயரும். ஷாப்பிங் சலுகைகள், ரயில் டிக்கெட் சலுகைகள் இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இதற்காகவே ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனமும், எஸ்பிஐ நிறுவனமும் இணைந்து ஐஆர்சிடிசி எஸ்பிஐ கிரெடிட் கார்டு (IRCTC SBI Credit card) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த கார்டை பெற விரும்புவோர் எஸ்பிஐ கார்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வருமான வரி விலக்கு.. பாதுகாப்பான முதலீடு.. இப்படியொரு திட்டமா?
இந்த கார்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன?

* கார்டு வைத்திருக்கும் நபர் பரிசுப் புள்ளிகளை (Reward points) வைத்து இலவசமாகவே ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

* ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பரிசுப் புள்ளிகளில் 10% வரை வேல்யூ பேக் சலுகை பெற முடியும். ஒரு பரிசுப் புள்ளியின் மதிப்பு 1 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் 450 நாட்களில் 500 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 350 போனஸ் பரிசுப் புள்ளிகள் கிடைக்கும்.

* இதுபோக இந்த கார்டு வைத்திருப்பவர் premium railway lounge வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

* அனைத்து பெட்ரோல் விலையங்களிலும் பெட்ரோல், டீசல் போடும்போது இந்த கார்டை பயன்படுத்தினால் கூடுதல் கட்டணத்தில் (fuel surcharge) 1% தள்ளுபடி கிடைக்கும்.

* இதுபோக பல்வேறு ஷாப்பிங் சலுகைகளும் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *