இலவசமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்… தீபாவளி ஆஃபர்!

by -27 views

பண்டிகை சீசன் வந்துவிட்டதால் பல்வேறு நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோ நிறுவனம் தீபாவளி பண்டிகை சீசனுக்கான சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் இலவசமாக வாங்கலாம். ஒரு ரூபாய் கூட செலவு செய்யத் தேவையில்லை.

”30 நாள், 30 பைக்” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்தில் தொடர்ந்து 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை இச்சலுகை வழங்கப்படும். ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்கு ஒரு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

தீபாவளிக்கு மூன்று போனஸ்.. அரசு ஊழியர்கள் ஹேப்பி!
தேர்ந்தெடுக்கும் நபர் முதலில் பைக்குக்காக செலுத்திய முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும். இவ்வாறாக, ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வெல்லலாம்.

பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்சினையால் பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்த விரும்புகின்றனர். அதற்கு ஏற்றாற்போல நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *