இறக்கம் காட்டிய தங்கம்… நகை வாங்குவோர் நிம்மதி!

by -29 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் மகிழ்ச்சி தரும் விதமாக, நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மாலை நேரத்திலும் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 29) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,350 ஆக இருந்தது. மாலையில் அது மேலும் குறைந்து 4,349 ரூபாய்க்கு வந்துள்ளது. அதேபோல, காலையில் 34,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 8 ரூபாய் குறைந்து 34,792 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold rate: நகை வாங்க நல்ல நாள்!! உடனே கிளம்புங்க!

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,713 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 37,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 8 ரூபாய் குறைந்து 37,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இரட்டை மகிழ்ச்சியாக வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.64.80 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.64.20 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *