இரு மடங்கு லாபம்! பணத்தை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

by -52 views

கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர். சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் அதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இந்திய தபால் துறை சார்பாக சிறப்பான சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு ஈடாக, தபால் நிலையங்களிலும் நிறைய சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் நல்ல வட்டி லாபமும் கிடைக்கிறது. இதில் போடும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதன்படி பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.

தபால் அலுவலகத்தில் புதிய சேவை.. இனி இதுவும் கிடைக்கும்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும். ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000, ரூ.50,000 என வெவ்வேறு மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் பத்திரங்கள் கிடைக்கின்றன.

கிராம மக்களுக்கான திட்டம்: ரூ.35 லட்சம் கிடைக்கும்!

இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்தவர்கள் வாங்க முடியும். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும்.

ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *