இப்படி தங்கம் வாங்குனா நல்லது! 500 ரூபாய் இருந்தா போதும்!

by -23 views

இந்தியாவில் தங்கம் விலை உயர்வு என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயம்தான். தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல; அதுவொரு சிறந்த முதலீட்டுப் பொருளாகும்.

தங்கத்தை இப்போது வாங்கி வைத்தால் சில காலம் பிறகு அதிலிருந்து பல மடங்கு லாபம் கிடைக்கும். முதலீடு செய்பவர்கள் தங்களது ஒட்டுமொத்த முதலீட்டில் தங்கத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வரை இடம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசகர்கள் கூறுகின்றனர். தங்கத்தை நேரடியாக வாங்குவதை விட கோல்டு மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு ஈடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. இதில் அதிக லாபமும் கிடைக்கும்.

நகை வாங்க சூப்பர் சான்ஸ்… ரொம்ப கம்மி விலை!

இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய தொகை தேவையில்லை. 500 ரூபாய்க்குக் கூட நீங்கள் தங்கம் வாங்கலாம். கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கலாம். ஆக்சிஸ் கோல்டு ஃபண்ட், கொடாக் கோல்டு ஃபண்ட், எஸ்பிஐ கோல்டு ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி கோல்டு ஃபண்ட் போன்ற திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தருகின்றன.

கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மூன்று ஆண்டுகளிலேயே 15 சதவீதம் வரையில் ரிட்டன் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *