இனி 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்!! ரிசர்வ் வங்கி அதிரடி!

by -48 views

சோலாப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லக்‌ஷ்மி கூட்டுறவு வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வங்கியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் வங்கி, சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 1000 ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும்.

கரண்ட் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட் உள்ளிட்ட அனைத்து கணக்குகளும் இது பொருந்தும். இந்த அதிரடி அறிவிப்பால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்துக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ எனவும் அஞ்சுகின்றனர். ஆனால் வாடிக்கையாளர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

ஏனெனில், வங்கிகளில் மக்கள் செய்யும் டெபாசிட்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் & கிரெடிட் கேரண்டீ கார்பரேஷன் அமைப்பு முழு உத்தரவாதம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வங்கிகளில் இவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. ஆனால் அவர்களின் டெபாசிட்களுக்கு காப்பீட்டுப் பணம் உறுதியளிக்கப்படுகிறது.

வங்கித் துறையில் நீடிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கிகள் சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்து நலிந்துவரும் வங்கிகளை மேம்படுத்தவும், தொடர்ந்து செயல்படவும் தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.

இதுபோன்ற நலிந்த வங்கிகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சோலாப்பூர் லக்‌ஷ்மி கூட்டுறவு வங்கி இனி வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கடன் வழங்கவும், வழங்கிய கடனை ரத்து செய்யவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதேபோல, வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்தான் பாபாஜி டேட் மகிளா சகாஹாரி வங்கிக்கு இதேபோன்ற கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருந்தது. ஆனால் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் 5000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *