இனி பென்சன் வராது.. உடனே இதை பண்ணிடுங்க!

by -18 views

ஹைலைட்ஸ்:

  • பென்சன் வாங்குவோர் உடனடியாக இதை செய்ய வேண்டும்
  • ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கான வழிகள்

ஒவ்வொரு மத்திய அரசு ஓய்வூதியதாரரும் தொடர்ந்து பென்சன் பெற வேண்டுமெனில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஜீவன் பிரமாணப் பத்திரம் எனப்படும் வாழ்வுச் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு முறைகளில் ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செயலாம். நேரடியாகவும், டிஜிட்டல் வழியிலும் ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியும் என பென்சன் மற்றும் பென்சனர் நலத் துறை தெரிவித்துள்ளது.

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜீவன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாணப் பத்திரத்தை எப்படி தாக்கல் செய்வது?

SBI வங்கிக்கு ஒரு கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு!
* ஓய்வூதியதாரர் நேரடியாக வந்தால், பென்சன் விநியோகிக்கும் வங்கியே ஜீவன் பிரமாணப் பத்திரத்தை பதிவு செய்துகொள்ளும்.

* சம்பந்தப்பட்ட அதிகாரி கையொப்பமிட்ட ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதியதாரர் நேரடியாக வரத் தேவையில்லை.

* https://jeevanpramaan.gov.in/ இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஜீவன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துவிடலாம்.

* ஓய்வூதியதாரரின் வீட்டுக்கே வந்து ஜீவன் பிரமாணப் பத்திரத்தை பெற்றுச் செல்வதற்கான திட்டத்தைல் இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

* வீட்டுக்கே நேரடியாக வந்து ஜீவன் பிரமாணப் பத்திரத்தை வாங்கிச் செல்ல 100 நகரங்களில் 12 பொதுத்துறை வங்கிகளுடன் பென்சன் துறை கூட்டணி அமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *