இனி எல்லாமே கிரெடிட் கார்டுதான்!

by -29 views

நகர்ப்புறங்களில் கிரெடிட் கார்டு இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு மிக அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் உள்ளன. பணம் செலுத்துவதற்கான பொதுவான முறைகளில் ஒன்றாக இப்போது கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன. ஆன்லைன் மூலமாகவும் நேரடி விற்பனையிலும் நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனினும், கிரெடிட் கார்டுகளை சரியாகக் கையாளாவிட்டால் பெரிய கடன் வலையில் சிக்க நேரிடும்.

பண நெருக்கடி சமயத்தில் மற்றவர்களிடம் கையேந்தி நிற்பதை விட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதைப் பெரும்பாலானோர் தங்களது அன்றாட நடவடிக்கையாகவே கொண்டுள்ளனர். இதனால் கிரெடிட் கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கிகளும் அதற்கு ஏற்றாற்போல பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. கிரெடிட் கார்டு சேவையில் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் முன்னிலை வகிக்கின்றன.

ஷாப்பிங் பிரியர்களுக்கு பொற்காலம்.. அதுவும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
அதுவும் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கிரெடிட் கார்டு விநியோகத்தில் ஐசிஐசிஐ வங்கி 19.6 சதவீத சந்தைப் பங்குடன் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சந்தைப் பங்கு 18.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் இடத்தில் இருப்பது ஹெச்டிஎஃப்சி பேங்க். ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் சேர்த்து ரூ.77,733 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 2020 ஆகஸ்ட் மாத அளவை விட (ரூ.50,319 கோடி) 54 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *