இனி உங்கள் பணத்தை திருட முடியாது.. எஸ்பிஐ ஏடிஎம் ரூல்ஸ்!

by -50 views

ஹைலைட்ஸ்:

  • மோசடி கும்பல்களுக்கு குட்பை
  • இனி உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது OTP அடிப்படையில் பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் திருட்டுப் போவதையும், மோசடிகளையும் தடுக்க முடியும்.

இத்திடத்தின் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் 10000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க முயற்சித்தால் ஏடிஎம் கார்டு PIN மட்டுமல்லாமல், உங்கள் மொபைலுக்கு வரும் OTP பாஸ்வோர்டும் பதிவிட வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதைப் போல, மோசடி கும்பல்களுக்கு எதிராக OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மோசடி கும்பல்களிடம் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் செலுத்துவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

கம்முனு இருக்கும் தங்கத்தில் கும்முனு வருமானம்.. சூப்பரா சம்பாதிக்கலாம்!
இத்திட்டம் எப்படி வேலை செய்கிறது?

* எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சிக்கும்போது OTP தேவைப்படும்

* உங்கள் வங்கியில் பதிவு செய்துகொண்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பிவைக்கப்படும்

* எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பின் OTP கேட்கப்படும்

* அதில் உங்களுக்கு வந்த OTP பாஸ்வோர்டை பதிவிடவும்

* பின் உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும்

* மோசடி கும்பல்களிடம் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்கும் அரணாக இத்திட்டம் செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *