இனி ஆதார் நம்பரிலேயே பணம் அனுப்பலாம்! புதிய வசதி அறிமுகம்!

by -44 views

இந்தியாவில் கொரோனா பிரச்சினை வந்தபிறகே பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். மொபைல் போன்கள் மூலமாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எளிதாகப் பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. ரீசார்ஜ், கட்டணம் செலுத்துவதும் எளிதாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஆதார் நம்பரை வைத்தே இனி நம்மால் பணம் அனுப்ப முடியும். இதுகுறித்த அறிவிப்பை ஆதார் அமைப்பு (UIDAI) வெளியிட்டுள்ளது. BHIM (Bharat Interface for Money) பீம் ஆப் மூலமாக ப் பணம் அனுப்பும்போது அனுப்ப வேண்டிய நபரின் ஆதார் நம்பரை வழங்கினாலே போதும். அவர்களுக்குப் பணம் அனுப்பிவிட முடியும்.

நிறையப் பேரிடம் மொபைல் நம்பரும் இருக்காது, யூபிஐ ஆப்களும் இருக்காது. இதுபோன்ற சூழலில் அவர்களுக்கு பணம் அனுப்புவது சிரமம். இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் வெறும் ஆதார் நம்பரை வைத்து மட்டுமே பணம் அனுப்பும் வசதி வந்துள்ளது. பீம் ஆப்பில் பணம் அனுப்பும்போது ஆதார் நம்பரை வழங்கினாலே போதும். வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் வாயிலாகப் பணம் அனுப்பப்படுகிறது.

சிலர் ஒரே ஆதார் எண்ணை நிறைய வங்கிக் கணக்குகளுடன் இணைத்திருப்பார்கள். இதுபோன்ற சூழலில் எந்த வங்கிக் கணக்குக்கு நாம் பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *