இந்த வார IPO.. முழு லிஸ்ட் இதுதான்!

by -29 views

ஹைலைட்ஸ்:

  • இந்த வாரம் தொடங்கும் ஐபிஓக்கள்
  • நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

இந்த வாரம் இரண்டு நிறுவனங்கள் ஐபிஓ தொடங்குகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கும் இவ்விரு ஐபிஓக்களின் விவரங்களை பார்க்கலாம்.

நைகா ஐபிஓ

நைகா (Nykaa) நிறுவனம் அழகுசாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ நாளை (அக்டோபர் 28) தொடங்குகிறது. இந்த ஐபிஓ மூலம் 5,325 கோடி ரூபாய் திரட்ட நைகாவின் தலைமை நிறுவனமான FN E-Commerce Ventures திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி வரை ஐபிஓ நடைபெறும். ஒரு பங்குக்கான விலை வரம்பு 1,085 ரூபாய் முதல் 1125 ரூபாய் வரை நிர்ணயிகப்பட்டுள்ளது. நைகா ஐபிஓவிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

Policybazaar IPO: தேதி இதுதான்.. முழு விவரம்!
ஃபினோ பேமண்ட்ஸ் பேங்க்

ஃபினோ பேமண்ட்ஸ் பேங்க் (Fino Payments Bank) நிறுவனத்தின் ஐபிஓ அக்டோபர் 29ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு பங்குக்கான விலை வரம்பு 560 ரூபாய் முதல் 577 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளை ஃபினோ பேமண்ட்ஸ் பேங்க் வெளியிடுகிறது.

நவம்பர் 12ஆம் தேதியன்று பங்குச் சந்தையில் பட்டியலிட ஃபினோ பேமண்ட்ஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஐபிஓ மூலம் சுமார் 1200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *