இந்த வாரம் பங்குச் சந்தை.. நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை!

by -24 views

ஹைலைட்ஸ்:

  • இந்த வார பங்குச் சந்தை
  • தீர்மானிக்கப்போகும் காரணிகள்

கடந்த வாரம் பங்குச் சந்தை முடிவின்போது நிப்டி 1.2% சரிந்தது. மறுபுறம் சென்செக்ஸ் 0.8% சரிந்தது. இந்த வாரம் பங்குச் சந்தை செயல்பாடுகளை தீர்மானிக்கும் அல்லது வழிநடத்தும் சில காரணிகளை பற்றி பார்க்கலாம்.

வருமான விவரங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 46% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான ரியாக்‌ஷனை நாளை பங்குச் சந்தை தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

அடேங்கப்பா.. 1000% லாபம் – அள்ளிக்கொடுத்த பங்குகள்!
காலாண்டு வருவாய் விவரங்கள்

இந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் உள்ள சுமார் 646 நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை வெளியிடவுள்ளன. இதற்கான ரியாக்‌ஷனையும் எதிர்பார்க்கலாம்.

ஐபிஓ

Nykaa, Fino Payment Bank ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் ஐபிஓ அறிமுகப்படுத்தவுள்ளன. Nykaa ஐபிஓ அக்டோபர் 28ஆம் தேதியும், Fino Payment Bank ஐபிஓ அக்டோபர் 29ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

தங்கப் பத்திர விநியோகம்

சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விநியோகம் நாளை (அக்டோபர் 25) தொடங்குகிறது. அக்டோபர் 29ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும். பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் வாயிலாக சவரன் தங்கப் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *