இந்த நோட்டு உங்களிடம் இருக்கா? 3 லட்சம் ரூபாய் கிடைக்கும்!

by -56 views
இந்த நோட்டு உங்களிடம் இருக்கா? 3 லட்சம் ரூபாய் கிடைக்கும்!
இந்த நோட்டு உங்களிடம் இருக்கா? 3 லட்சம் ரூபாய் கிடைக்கும்!

ஹைலைட்ஸ்:

  • அள்ளித் தரும் அரிய ரூபாய் நோட்டு
  • இந்த நோட்டு உங்ககிட்ட இருக்கா?

அரிய ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு ஆன்லைன் மார்க்கெட்டில் கணிசமான டிமாண்ட் உருவாகியுள்ளது. 50 பைசா காயின் முதல் 5 ரூபாய் வரை பல பழைய நாணயங்கள், அரிய நோட்டுகள் அண்மைக்காலத்தில் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளன. இதனால் பலர் லட்சங்களில் வருமானம் சம்பாதித்துள்ளனர்.

அவ்வகையில், பயங்கர டிமாண்ட் உள்ள ஒரு ஸ்பெஷல் வகை ரூபாய் நோட்டு பற்றி இப்போது பார்க்கலாம். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணில் 786 என்ற எண் இருந்தால் அதை நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

1, 5, 10, 20, 50, 100, 2000 ரூபாய் என எந்த ரூபாய் நோட்டாக இருந்தாலும், அதன் சீரியல் எண்ணில் 786 என்ற எண் இருந்தால் அதற்கு டிமாண்ட் அதிகம். இவ்வகை நோட்டுகளை வாங்குவதற்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அண்மையில் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இந்த நோட்டுகள் விற்பனையாகியுள்ளன.

வெறும் 634 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்! வீடு தேடி வரும்!
786 எண்ணில் என்ன ஸ்பெஷல்? இஸ்லாமிய சமூக மக்கள் 786 எண்ணை புனிதமானதாக கருதி மதிப்பளிக்கின்றனர். எனவே, சீரியல் எண்ணில் 786 நோட்டுகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. உங்களிடமும் 786 சீரியல் எண் கொண்ட ரூபாய் நோட்டு இருந்தால் எப்படி விற்பனை செய்வது?

* Quickr, Indiamart, Ebay போன்ற தளங்களில் உங்களை விற்பனையாளராக (Seller) பதிவு செய்துகொள்ளவும்.

* உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டின் படத்தை பதிவேற்றவும்.

* மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும்.

* ரூபாய் நோட்டை வாங்க விருப்பமுள்ளவர்கள் உங்களை தொடர்புகொண்டு விலை கேட்பார்கள்.

* அவர்களிடம் விலை பேசி ரூபாய் நோட்டை விற்றுவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *