இந்த ஒரு பாலிசி போதும்… கடைசிக் காலத்தில் உட்கார்ந்தே சாப்பிடலாம்!

by -43 views

கையில் உள்ள சிறிய தொகையை எங்காவது முதலீடு செய்து மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்ட விரும்புகிறீர்களா? உங்களுக்கான ஒரு சிறப்பான திட்டம் உள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) இந்த பாலிசி உங்களது சிறிய சேமிப்புப் பணத்தை முதிர்வு காலத்தில் ஒரு பெரிய தொகையாக மாற்ற உதவும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாகும். ஓய்வுக் காலத்தில் சுகமான வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதற்கு ஏதுவாக நிறைய லாபம் தரும் பல்வேறு திட்டங்களை எல்.ஐ.சி. செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம்.

இத்திட்டத்தில் நீங்கள் சிறிய தொகையை முதலீடு செய்து ஓய்வுக் காலத்தில் பெரிய லாபம் சம்பாதிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தில் ஒரு சிறிய தொகையை எடுத்து வைத்தாலே போதும். 12 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணையலாம். 45 வயதுக்கு மேல் இணைய முடியாது.

குறைந்தது 12 ஆண்டுகளாவது இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். நீங்கள் மாதத்துக்கு 6,000 ரூபாய் முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உள்ளது. பாதுகாப்பான இடத்தில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் இது உங்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *