இந்திய பணக்காரர் பட்டியல்… கெத்து காட்டும் அம்பானி!

by -22 views

2021ஆம் ஆண்டுக்கான ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம்போலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டவர் கௌதம் அதானி. பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி, அம்பானியைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.5,05,900 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 261 சதவீத வளர்ச்சியாகும். தினசரி ரூ.1,002 என்ற அளவில் அவர் சொத்து சேர்த்துள்ளார். அம்பானியின் தினசரி சொத்து மதிப்பு உயர்வு கூட ரூ.163 தான்.

28 ஆயிரம் ரூபாய் இருந்தா போதும்… இந்த பைக் வாங்கலாம்!
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் பட்டியலில் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். 67 சதவீத வளர்ச்சி கண்டுள்ள அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.2,36,600 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் இரண்டாம் இடத்தில் இருந்த ஹிந்துஜா குடும்பம் இந்த ஆண்டில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.2,20,000 கோடியாகும்.

இந்த ஆண்டுக்கான பட்டியலில், லக்‌ஷ்மி மிட்டல் ஐந்தாம் இடத்திலும், சிரஸ் பூனவல்லா ஆறாம் இடத்திலும், ராதாகிருஷ்ணன் தமணி ஏழாம் இடத்திலும், வினோத் சந்தியல் எட்டாம் இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா ஒன்பதாம் இடத்திலும், ஜெய் சவுத்ரி பத்தாம் இடத்திலும் உள்ளனர். சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ள தொழிலதிபராக ரத்தன் டாடா முதலிடத்தில் உள்ளார். ஆனந்த் மகிந்திராவுக்கு இதில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *