ஆன்லைன் பண மோசடி… திரும்பப் பெறுவது எப்படி?

by -22 views

தொழில்நுட்ப அம்சங்கள் மனிதனுக்கு எவ்வாறு உதவிகரமாக இருக்கின்றனவோ அதற்கு சமமாக, ஆபத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளன. அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. அதுவும் ஆன்லைன் மோசடிகள் இப்போதெல்லாம் அதிகமாக நடைபெற்று வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுகின்றனர். இதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. கண் இமைக்கும் நேரத்தில் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது. நீங்களும் இதுபோல பணத்தை இழந்துள்ளீர்களா?

கவலை வேண்டாம்! ஆன்லைன் மூலமாக மோசடி செய்யப்பட்ட பணம் பத்தே நாட்களுக்குள் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். இப்போதெல்லாம் வங்கிகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைகள் அனைத்தும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால்தான் ஆன்லைன் பண மோசடிகளும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக, ஊரடங்கு சமயத்தில் நிறையப் பேர் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2.7 கோடிப் பேர் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Gold rate: தங்கம் வாங்குற ஆசை இருந்தா விட்ருங்க!

இதுபோல ஆன்லைன் மோசடிக்கு நீங்கள் ஆளானால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கோ அல்லது நிதி நிறுவனத்துக்கோ புகாரளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி வங்கிகள் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது பணத்துக்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. எனவே ஆன்லைன் பண மோசடி போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு காப்பீட்டு நிறுவனமும் வங்கியும் உரிய காப்பீட்டை வழங்கும். பொதுவாக, காணாமல் போன முழுப் பணமும் 10 வேலை நாட்களுக்குள் திரும்ப வழங்கப்பட்டுவிடும்.

மோசடி நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் வங்கியிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அதை விடத் தாமதமாகத் தெரிவித்தால் அதிகபட்சமாக ரூ.25,000 வரை மட்டுமே நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *