ஆதார் கார்டு கையில் இல்லையா? கவலை வேண்டாம்! இது போதும்!

by -51 views

இந்தியாவில் ஆதார் இல்லாவிட்டால் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலைமை விரைவில் வந்துவிடும்போல; அந்த அளவுக்கு ஆதார் கார்டு அனைத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயம். வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பிஎஃப் கணக்கு, பான் கார்டு எனப் பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயமாகும். ஆதார்தான் இப்போது தனி மனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.

ஆதார் கார்டு அனைவரிடமுமே இருக்கும். ஆனால் சில நேரங்களில் ஆதார் கார்டு கையில் இருக்காது. வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். அப்போது ஆதார் தேவைப்பட்டால் கவலை வேண்டாம். இ-ஆதார் போதும்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி?
அது என்ன இ-ஆதார்? கையில் வைத்திருக்கும் ஆதார் அட்டையைப் போல டிஜிட்டலில் ஆதார் கார்டை நாம் ஸ்மார்ட்போன்களில் வைத்துக்கொள்ளலாம். அது இருந்தாலே போதும். எல்லா நேரமும் ஆதார் கார்டை கையில் வைத்துக்கொண்டு அலையத் தேவையில்லை.

ஆதார் அமைப்பின் UIDAI வெப்சைட்டில் சென்று இந்த இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆதார் நம்பர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருந்தால் போதும். ஓடிபி சரிபார்ப்பு மூலம் இ-ஆதார் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *