ஆதார் கார்டில் மொபைல் நம்பர் அப்டேட் செய்வது எப்படி?

by -41 views

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாது. பிறந்த குழந்தை முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் கார்டு மிக அவசியமான ஒன்றாகும். ஆதார் கார்டு இருந்தால்தான் கொரோனா தடுப்பூசியே போடமுடியும். அந்த அளவுக்கு ஆதார் கார்டு படிப்படியாக ஒவ்வொரு விஷயமாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை நீங்கள் பொதுச் சேவை மையங்களில் திருத்திக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் அப்டேட் செய்ய முடியும். அதற்கான வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) வழங்கியுள்ளது. ஆதார் கார்டில் நீங்கள் எந்தவொரு திருத்தம் செய்வதாக இருந்தாலும் அதற்கு மொபைல் நம்பர் அவசியமாகும். மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பரை வைத்து நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அந்த மொபைல் நம்பரையே மாற்ற வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள்?

ஏனெனில் நிறையப் பேர் தங்களது மொபைல் நம்பரை அடிக்கடி மாற்றுவார்கள். ஆதார் எடுக்கப்பட்டபோது இருந்த மொபைல் நம்பர் இப்போது இருக்காது. இதுபோன்ற காரணங்களால் புதிய மொபைல் நம்பரை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

https://ask.uidai.gov.in. என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய புதிய மொபைல் நம்பரைப் பதிவிட வேண்டும்.

கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு ‘send OTP’ கொடுக்க வேண்டும்.

உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ‘Submit OTP & Proceed’ கொடுக்க வேண்டும்.

அடுத்து, ‘Online Aadhaar Services’ என்ற வசதியில் உள்ள update phone number ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது மீண்டும் கேப்ட்சா குறியீடு மற்றும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ‘Save and Proceed’ கொடுக்க வேண்டும்.

அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் நீங்கள் திருத்தம் செய்வதற்கான அப்பாயின்மெண்ட் இதன் மூலம் நீங்கள் பதிவு செய்யவேண்டும்.

பின்னர் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று கைரேகை, கண்விழி ரேகை சரிபார்ப்பு செய்து மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *