ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி?

by -30 views

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் என்பது மிகவும் கட்டாயமான தனிநபர் அடையாள ஆவணமாகும். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. முன்பெல்லாம் ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். அதில் பலருக்கு சிரமம் இருந்தது. கொரோனா வந்தபிறகு சமூக இடைவெளி போன்ற பிரச்சினைகளும் உள்ளன.

ஆனால் இப்போது வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் அப்டேட் செய்ய முடியும். ஆதாரில் முகவரி மாற்றுவது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்…

ஆதார் அமைப்பின் uidai.gov.in என்ற வெப்சைட்டில் லாகின் செய்ய வேண்டும். அதில் ‘update Aadhaar’ என்ற வசதியை கிளிக் செய்து ‘update your address online’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்டேட் செய்ய முடியும்.

புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது மொபைல் நம்பரைப் பதிவிட்டு ’get OTP’என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். ‘address update’ என்பதில் சென்று உங்களது முகவரி குறித்த விவரங்களைப் பதிவிடவும். அதன் பின்னர் முகவரி ஆதாரத்துக்குத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பர் ஒன்று வழங்கப்படும். அதை வைத்து நீங்கள் ஆதார் அப்டேட் விவரங்களை டிராக் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *