ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி?

by -36 views

ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பெரும்பாலும் ஆதார் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுத்ததாக இருக்கும். ஆதார் கார்டில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரியும். எனவே நிறையப் பேர் ஆதாரில் உள்ள போட்டோவை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதாரில் போட்டோ மாற்றுவதற்கு எங்கே செல்ல வேண்டும், எவ்வளவு செலவாகும் என்ற சந்தேகம் இருக்கலாம். அது ஈசிதான்.

ஆதார் அட்டையில் தனிநபரின் பெயர், முகவரி, போன்றவற்றை ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்யலாம். ஆனால் மொபைல் எண், புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றுதான் மாற்ற முடியும்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு… புதிய ரேட் இதுதான்!!
ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உள்ள Get aadhaar என்ற வசதியில் சென்று ஆதார் அப்டேட் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்துக்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். அங்கு உங்களது கைரேகை, விழித்திரை ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும்.

புகைப்படத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்களுக்கு ஒரு URN அல்லது புதுப்பிப்பு கோரிக்கை எண் வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து உங்களது விண்ணப்ப கோரிக்கை நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம். சுமார் 90 நாட்களில் புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை உங்களுக்குக் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *