ஆதாரில் மொபைல் நம்பர் மாத்தணுமா? ஈசி வழி!

by -23 views

ஆதார் கார்டு இல்லாமல் யாரும் இல்லை. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் எந்தவொரு நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் தனிநபரின் முக்கியமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் மொபைல் நம்பர் மிகவும் முக்கியமானது. ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டுமானால் மொபைல் நம்பர் கட்டாயம். ஆனால் மொபைல் நம்பரிலேயே திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள்?

ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டியிருந்தால் நீங்களாகவே ஆதார் வெப்சைட்டில் (UIDAI) செய்ய முடியும். ஆனால் மொபைல் நம்பரை மாற்றுவதற்கு ஆதார் சேவை மையத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே ஆதார் அப்டேட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். அதைப் பூர்த்திசெய்து, புதிய மொபைல் நம்பரைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவைக் கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படும். சில இடங்களில் 50 ரூபாய் கூட வாங்குவார்கள். ஆனால் மொபைல் நம்பர் அப்டேட்டுக்கு ஆதார் அமைப்பு நிர்ணயித்துள்ள தொகை 25 ரூபாய் மட்டுமே.

ஆதார் – பான் இணைப்பு.. இதுதான் கடைசி தேதி.. முக்கிய எச்சரிக்கை!
உங்களுடைய விவரங்களை அப்டேட் செய்தவுடன் உங்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படும். அதில் அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் ஒன்று இருக்கும். இந்த நம்பரை வைத்து உங்களது ஆதாரில் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம். மொபைல் நம்பர் இணைக்கப்பட்டவுடன் உங்களது ஆதார் கார்டை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு 1947 என்ற டோல் ஃபிரீ நம்பரை அழைத்தும் நீங்கள் தெளிவுபெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *