ஆசை காட்டி மோசம் செய்த பங்குச் சந்தை.. கடுப்பில் முதலீட்டாளர்கள்!

by -39 views
ஆசை காட்டி மோசம் செய்த பங்குச் சந்தை.. கடுப்பில் முதலீட்டாளர்கள்!
ஆசை காட்டி மோசம் செய்த பங்குச் சந்தை.. கடுப்பில் முதலீட்டாளர்கள்!

கடந்த சில தினங்களாக பங்குச் சந்தை தொடர் சரிவைச் சந்தித்து வந்தது. மார்க்கெட் எப்போது மீண்டும் பாசிடிவ் பாதைக்கு திரும்பும் என முதலீட்டாளர்கள் காத்து கிடந்த நிலையில், இன்று காலையில் பங்கு வர்த்தகம் பாசிடிவாக தொடங்கியது.

சென்செக்ஸ், நிப்டி இரண்டும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் இரண்டும் சரியத் தொடங்கிவிட்டன. இறுதியில், சென்செக்ஸ் 323 புள்ளிகளும் (-0.55%), நிப்டி 88 புள்ளிகளும் (-0.50%) சரிந்துள்ளன. இதில் 1950 பங்குகள் முன்னேறியுள்ளன, 1249 பங்குகள் சரிந்துள்ளன, 142 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

நிப்டியில் அதிகபட்சமாக டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, கிரசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளன. ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, கொடாக் மகிந்த்ரா வங்கி, பாரத் பெட்ரோலியம் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

6 மாதத்தில் முரட்டு லாபம்.. எகிறி அடித்த பங்கு!
ஐபிஓவுக்கு பின் லேட்டண்ட் வியூ அனாலிடிக்ஸ் (Latent View Analytics) பங்கு நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. நேற்றே ஐபிஓ விலையைக் காட்டிலும் மிக அதிக விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் இன்றும் இந்தப் பங்கு 20% உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *