அரசு வீடு உங்களுக்குக் கிடைக்குமா? செக் பண்றது ஈசி!

by -92 views

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் நிறையப் பேர் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு http://pmaymis.gov.in. என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். மெயின் மெனுவின் கீழ் உள்ள ‘Citizen Assessment’ என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும். உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

பேசும் அரிய பொக்கிஷங்கள்; அடையாளமாய் விளங்கும் பாரம்பரிய கடை!

அடுத்ததாக, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்று பார்ப்பதற்கு rhreporting.nic.in?netiay/benificiary.aspx என்ற முகவரியில் செல்லவும். அதில் உங்களது பதிவு எண்ணைக் கொடுத்து கிளிக் செய்யவும். இப்போது பயனாளி பற்றிய விவரங்கள் வரும்.

ஒருவேளை உங்களிடம் பதிவு எண் இல்லையென்றால் ’Advance search’ என்ற ஆப்சனை கிளிக் செய்து அந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். ’search’ என்ற வசதியை கிளிக் செய்தால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பட்டியல் ஓப்பன் ஆகும். உங்களது பெயர் இணைக்கப்பட்டிருந்தால் பட்டியலில் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *