அரசு மின்னணு சந்தையில் 1.50 லட்சம் நெசவாளர்கள்!

by -28 views

நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் சென்று ஆண்டின் ஜூலை மாதத்தில் மத்திய அரசின் சார்பாக e-Marketplace (GeM) என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டது. இந்த வெப்சைட்டின் வாயிலாக நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரசுத் துறைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும். சந்தை வாய்ப்புகளை அணுகுவதில் சவால்களைச் சந்தித்து வரும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் ஈடுபட்டு வரும் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், சிறு தொழில்முனைவோர், பழங்குடி மக்கள் ஆகியோர் இதனால் பயனடைந்து வருகின்றனர்.

இந்த வெப்சைட்டில் இதுவரையில் 28,000க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களும், 1.49 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்களும் பதிவுசெய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையில் அரசு மின்னணு சந்தையில் 28,374 கைவினைக் கலைஞர்களும் 1,49,422 நெசவாளர்களும் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு: மக்களுக்கு உதவ புதிய திட்டம்! வருமானமும் உயரும்!
கைவினை சேவை மையங்களைச் சேர்ந்த 56 அதிகாரிகள் மற்றும் நெசவாளர் சேவை மையங்களைச் சேர்ந்த 28 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, கைத்தறிப் பொருட்களுக்காக 28 பிரத்தியேக பிரிவுகளும், கைவினைப் பொருட்களுக்காக 170 பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை பல்வேறு அரசுத் துறைகள் வாங்குவதற்கு ஏதுவாக இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்களும் கைவினைக் கலைஞர்களும் வெகுவாகப் பயன்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *