அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

by -71 views

ஹைலைட்ஸ்:

  • மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
  • உத்தராகண்ட் அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தின.

இந்த வரிசையில், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த உத்தராகண்ட் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என உத்தராகண்ட் கேபினட் அமைச்சர் சுபோத் உனியால் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நேற்று மாநில கேபினட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த கேபினட் ஒப்புதல் அளித்தது.

இனி பென்சன் வராதா? வெளியான பரபரப்புத் தகவல்!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கு உத்தராகண்ட் அரசு கட்டுப்பாடு விதித்திருந்ததுது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த தடையை முதல்வர் புஷ்கர் சிங் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்தப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வும் அனைத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கிடைக்கும்.

அகவிலைப்படி உயர்வால் சுமார் 1,60,000 அரசு ஊழியர்கள் மற்றும் 1,50,000 ஓய்வூதியர்கள் பயடைன்வார்கள் என்று தெரிகிறது. உத்தராகண்ட் மாநிலத்துக்கு முன் உத்தரப் பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், ஜார்கண்ட், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *