அம்பானியின் வெற்றிக் கதை… ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோடீஸ்வரர்!

by -58 views
அம்பானியின் வெற்றிக் கதை… ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோடீஸ்வரர்!
அம்பானியின் வெற்றிக் கதை… ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோடீஸ்வரர்!

”ஏழையாகப் பிறப்பது தவறு இல்லை; ஆனால் ஏழையாக மடிவதுதான் குற்றம்” என்பது பில் கேட்ஸின் பொன்மொழி. இதை நிஜமாக்கிக் காட்டியவர்தான் திருபாய் அம்பானி.

குஜராத் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தார் திருபாய் அம்பானி. அவரது தந்தை ஒரு ஆசிரியர். திருபாய் அம்பானியின் இளைமைக் காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. அவர் படித்தது 10ஆம் வகுப்பு வரை மட்டும்தான். அதன் பிறகு வேலை செய்யத் தொடங்கினார். சம்பளம் வெறும் 300 ரூபாய்.

திருபாய் அம்பானிக்கு 17 வயது ஆனபோது ஏமன் நாட்டில் உள்ள தனது சகோதரரின் உதவியோடு அங்கு ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தார். அங்கு இருக்கும்போதே தான் ஒரு பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்க மீண்டும் இந்தியா திரும்பினார்.

1

1958ஆம் ஆண்டு இந்தியா வந்த அம்பானி, ஜவுளி தொழிலை சிறியதாகத் தொடங்கினார். இந்த நிறுவனம் வாயிலாக மசாலா பொருட்களும் ஏமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாறாக தனது தொழிலை விரிவுபடுத்தினார். திருபாய் அம்பானியின் முதல் அலுவலகம் வெறும் 330 சதுர அடி மட்டுமே. மிகவும் நெருக்கமான இடம். இப்படித்தான் அம்பானியின் தொழில் வாழ்க்கை தொடங்கியது.

தனது உறவினருடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்த அவர் அது எடுபடாததால் அதிலிருந்து தனியாக வந்து 1996ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கமர்சியல் கார்பரேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம்தான் இப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது. 1973 மே மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உதயமானது.

2

கோகிலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, நீனா, தீப்தி ஆகிய நான்கு பிள்ளைகள். இதில் முகேஷ் அம்பானிதான் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் முகேஷ் அம்பானி ஆதிக்கம் செலுத்துகிறார். பங்கு அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக இன்று ரிலையன்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. அதற்கு விதை போட்டவர் சாதாரண ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த திருபாய் அம்பானி.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி மாரடைப்பால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருபாய் அம்பானி, ஜூலை 6ஆம் தேதி இயற்கை எய்தினார். சுயமாக உழைத்து முன்னேறி பெரிய வெற்றிகளைக் கண்ட ஒரு மாபெரும் சக்தியை இந்தியா இழந்துவிட்டது என்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கவலை தெரிவித்தார்.

3

திருபாய் அம்பானியின் வழியில் இப்போது முகேஷ் அம்பானி தனது தந்தை காணாத புதிய உச்சங்களைக் கண்டு தொழில் துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மாபெரும் சக்தியாக உருவாக்கியுள்ளார்.

தொழில்முனைவோருக்கும் இளம் தலைமுறையினருக்கும் திருபாய் அம்பானியின் கதை முன்னேறத் தூண்டும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

50 பைசாவில் தொடங்கி 2 லட்ச ரூபாய் வரை… பாட்ரிசியாவின் வெற்றிக் கதை!

Success Story: யார் இந்த ஷிவ் நாடார்? தமிழகத்தின் மாபெரும் சக்தியாக மாறியது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *