அமேசானில் 70% தள்ளுபடி.. தீபாவளிக்கு சூப்பர் ஆஃபர்!

by -22 views

ஹைலைட்ஸ்:

  • எலெக்ட்ரானிக்ஸ், மொபைல்களுக்கு செம தள்ளுபடி
  • தீபாவளிக்கு வந்த ஸ்வீட் நியூஸ்

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த செலவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கிச் செல்ல அமேசான் நிறுவனம் அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் 70% தள்ளுபடியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கலாம்.

இதுகுறித்து அமேசான் ட்விட்டரில், பண்டிகைக்காலத்தில் 70% தள்ளுபடியுடன் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு எலெக்ட்ரானிக் பொருட்களை பரிசளியுங்கள் என்று தெரிவித்துள்ளது. உதாரணமாக 52190 ரூபாய் மதிப்புள்ள Lenovo Ideapad Slim 3 Laptop 33,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

32,900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் 27,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொபைல்கள் மற்றும் மொபைல் accessories 40% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் EMI மூலம் வாங்கினால் 10% சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காலியாகும் இன்சூரன்ஸ் பணம்… கொரோனா இல்லை, இது வேற!
ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போர் சலுகைகளைப் பெறலாம். தந்தேராஸ் பண்டிகையையொட்டி தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் 20% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *