அடேங்கப்பா.. 70 மடங்கு லாபம் கொடுத்த இண்டெக்ஸ்!

by -29 views

ஹைலைட்ஸ்:

  • 9 ஆண்டுகளில் 70 மடங்கு லாபம்
  • கெத்து காட்டிய SME இண்டெக்ஸ்

மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் செப்டம்பர் 24ஆம் தேதியன்று முதல்முறையாக 60000 புள்ளிகளை தாண்டியது. இதை மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதுவொரு புறமிருக்க, இந்தியாவில் ஒரு பங்குச் சந்தை குறியீடு 70 மடங்கு வருமானம் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் 5 மடங்கு வருமானம் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய பங்குச் சந்தை குறியீடு S&P BSE SME IPO. இக்குறியீடு தொடங்கப்பட்டபோது அதன் அடிப்படை மதிப்பு 100. இப்போது இக்குறியீட்டின் மதிப்பு 7579.94 ரூபாய். அதாவது, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் S&P BSE SME IPO குறியீடு 70 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளது.

PF அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு நிம்மதி.. விஷயம் தெரியுமா உங்களுக்கு?
ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான மூலதனத்தை திரட்டுவதற்கு SME குறியீடுகளில் நுழைவதற்கு அரசு அனுமதித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் SME வர்த்தகத்துக்கான அடித்தளத்தை செபி அமைத்தது. இப்போது ஒட்டுமொத்த நிறுவனங்களில் 95% SME (சிறு, குறு, நடுத்தர) நிறுவனங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவிலும் லண்டன், கனடா, ஹாங் காங், ஜப்பான், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் SME பங்குச் சந்தைகள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *