அடேங்கப்பா 50% லாபம்.. கெத்து காட்டிய IDFC First Bank!

by -37 views

ஹைலைட்ஸ்:

  • ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிகர லாபம் உயர்வு
  • முழு வருமான விவரங்கள் இதோ

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) தனது செப்டம்பர் காலாண்டு வருமான விவரங்களை நேற்று வெளியிட்டது. இதன்படி, செப்டம்பர் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் லாபம் அதிரடியாக 50 விழுக்காடு உயர்ந்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 151.74 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் நிகர லாபம் 101.41 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூன் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 630 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

இந்த செப்டம்பர் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் மொத்த வருமானம் 4,800.20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 4090.87 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

IPO Alert: சஃபயர் ஃபுட்ஸ் ஐபிஓ.. தேதி இதுதான் – புதிய அப்டேட்!
இந்த செப்டம்பர் காலாண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வட்டி வருமானம் மூலம் 4100.58 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் வட்டி வருமானம் மூலம் 3,924.86 கோடி ரூபாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகர வட்டி வருமானம் (NII) 27 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதே சூழலில், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் நிகர வாராக் கடன்களும் (NPA) 0.43 விழுக்காட்டில் இருந்து 2.09 விழுக்காடாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *