அடிமேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி!

by -32 views

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும். வாகன விற்பனையிலும் இந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் சென்ற செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன உற்பத்தி மற்றும் வாகன விற்பனை என இரண்டுமே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 81,278 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இது 2020ஆம் ஆண்டின் இதே மாத உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 51 சதவீத வீழ்ச்சியாகும். 2020 செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 1,66,086 வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் மட்டும் 2021 செப்டம்பர் மாதத்தில் 77,782 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 செப்டம்பரில் 1,61,668 ஆக இருந்தது.

ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட வாகனங்களைக் கொண்ட மினி கார்கள் பிரிவில் வாகன உற்பத்தி எண்ணிக்கை 30,492லிருந்து 17,163 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, வேகன்-ஆர், செலெரியோ, இக்னிஸ்,ஸ்விஃப்ட் உள்ளிட்ட வாகனங்களை உள்ளடக்கிய காம்பாக்ட் கார்கள் பிரிவில் உற்பத்தி எண்ணிக்கை 90,924லிருந்து 29,272 ஆகக் குறைந்துள்ளது. ஜிப்ஜி, எர்டிகா உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் பிரிவிலும் 21,873 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2020 செப்டம்பர் மாதத்தில் இப்பிரிவில் 26,648 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

பரிதாப நிலையில் மாருதி சுசூகி… என்னாச்சு தெரியுமா?
சில தினங்களுக்கு முன்னர் வாகன விற்பனை தொடர்பான விவரங்களையும் மாருதி சுஸுகி வழங்கியிருந்தது. அதிலும் பின்னடைவுதான். 2021 செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 86,380 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால், 2020 செப்டம்பர் மாதத்தில் 1,60,442 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 46.16 சதவீத வீழ்ச்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *