அக்.1 முதல் புது ரூல்ஸ்! இனி நமக்கே தெரியாமல் பணம் போகாது!

by -29 views

நம் அனைவருமே டெபிட் கார்டு பயன்படுத்துகிறோம். பலர் கிரெட் கார்டுகளும் பயன்படுத்துகின்றனர். டெபிட் கார்டுகளில் பணம் எடுப்பதற்கு மட்டுமல்லாமல், ஷாப்பிங் போன்றவற்றும் ஸ்வைப் செய்கிறோம். அதேபோல, வங்கியில் வாங்கும் கடன், ஈஎம்ஐ வசதியில் வாங்கும் பொருட்கள் போன்றவற்றுக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை டெபிட் கார்டிலிருந்து பிடித்தம் செய்யப்படும். இது ஆரம்பத்தில் பரவாயில்லை என்றாலும் போகப் போல இது பலருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், டெபிட் கார்டில் ஏதேனும் அவசரத் தேவைக்குப் பணம் வைத்திருந்தால் அது நாம் எடுப்பதற்கு முன்னரே ஆட்டோ டெபிட் செய்யப்பட்டிருக்கும்.

ஆட்டோ டெபிட் என்பது நாம் செலுத்தியே ஆகவேண்டியது என்றாலும் நமது சூழ்நிலையைப் பொறுத்து அது நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது, இனி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றிலிருந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது. அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வழங்கினால் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படும். இந்தப் புதிய விதிமுறை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இளைஞர்களுக்கான கிரெடிட் கார்டு.. 3 நிமிடத்தில் கிடைக்கும்.. அதுவும் மொபைலிலேயே!
புதிய விதிமுறைப்படி, ஆட்டோ டெபிட் செய்யப்படும் தேதிக்கு முந்தைய நாளில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு SMS அல்லது இ-மெயில் மூலமாகத் தகவல் அனுப்பப்படும். அதற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னரே ஆட்டோ டெபிட் செய்யப்படும். இந்த அறிவிப்பை மார்ச் 31ஆம் தேதியே ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. இதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், வங்கிகளின் கோரிக்கையின் பேரில் இதற்கான கால வரம்பு அக்டோபர் 1க்கு நீட்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *