Saturday, January 2, 2021

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39 அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000 பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

Tuesday, December 29, 2020

ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம்

 

அறிமுகம்

மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Monday, December 28, 2020

சிபில் ஸ்கோர்

 

அறிமுகம்


சிபில் எனப்படுவது கடன் தகவல் அலுவலகமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும். இது கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. இந்தியாவின் நிதித்துறை மேம்பாட்டிற்கு இது பெரும் பங்காற்றுகிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு உதவியும் வாடிக்கையாளர்கள் சிறந்த வட்டி விகிதத்தில் விரைவான முறையில் கடன்களைப் பெறவும் இது உதவுகிறது. தனிநபர் சார்ந்த கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் குறித்த விபரங்கள் அனைத்தையும் சிபில் சேகரித்து பாதுகாக்கிறது.

Thursday, December 24, 2020

நூடுல்ஸ் தயாரிப்பு முறை - சுயதொழில்

 

நூடுல்ஸ்

நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பெறலாம்.

குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.


தயாரிப்பு முறை

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

Friday, April 12, 2019

என்ன தொழில் செய்யலாம் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம். 

Wednesday, March 27, 2019

தொப்புள்கொடி மருத்துவம் !

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!

கிருஷ்ணகிரியில், இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்திருந்ததைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

Sunday, January 6, 2019

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..!


இந்தியாவின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் அஞ்சலக திட்டங்கள் (Post Office Schemes), இந்திய அரசு திட்டங்கள் என அனைத்தும் அடக்கம். இந்த நேரத்தில் அப்படியே அந்த திட்டங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன்.

யார் அறிவிப்பார்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்காக வட்டி விகிதங்களை அறிவிக்கும். ஜனவரி - மார்ச் 2019 காலாண்டுக்கான வட்டி விகிதத்தை கடந்த டிசம்பர் 31, 2018 அன்று வெளியிட்டது பொருளாதார விவகாரத் துறை. அந்த அறிப்பைப் காண: 

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - TIIC

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.

Saturday, December 17, 2016

ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக் – அபாயம்
‘ச்சே… ச்சே… நாங்கள்லாம் புத்திசாலி. ஒன்லி ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக்தான் யூஸ் பண்ணுவோம்’ என்று சொல்வோருக்கு ஒரு விஷயம்… பெரும்பாலான இந்த சமாசாரங்கள் உங்களை வாங்கவைக்கும் உத்தியாக லேபிளில் மட்டுமே ஒட்டப்படுகின்றன.

சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்புகள் சந்தையில் மிக அரிது. ‘கொஞ்சம் மூலிகை; கொஞ்சம் கெமிக்கல்’ என்ற கலவைகள்தான் அதிகம். சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் CERTECH எனும் அமைப்பு ஆர்கானிக் என உலகில் விற்கப்படும் அழகூட்டிகளில் 10 சதவிகித மூலப்பொருட்கள் மட்டுமே ஆர்கானிக் என்கிறது.குழந்தைகளுக்கு என விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவன என தன் அறிக்கையில் கூறுகிறது.